Saturday, July 3, 2010

“ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்” செய்தி அவதூறு! tntj


“ஜெயலலிதாவை சந்திக்கிறார் பீ.ஜெய்னுல் ஆபிதீன்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை; அவதூறு என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அதிகாரப்பூர்வ இணைதளம் மற்றும் பி.ஜே யின் அதிகாரப்பூர்வ இணைதளம் வழி பின்வருமாறு அறிவித்திருக்கிறார்கள்.

//பி.ஜே அவர்கள் அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து ஜுலை 4 மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க இருக்கின்றார்கள் என்று மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஒரு இணையதள பத்திரிக்கை நிருபருக்கு பேட்டி கொடுத்ததாக இணையதளத்தில் வந்த செய்தி முற்றிலும் பொய்யான அவதூறு செய்தியாகும். அல்தாஃபி அவர்கள் அவ்வாறு எந்த நிருபருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

எனவே, எங்களின் செய்திக்கு,ஏற்பட்ட பிழைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மற்றும் தவறான செய்தி தந்த செய்தியாளர் கதிரையும் தமிழ்நிருபர்.காமிலிருந்தும் நீக்குகிறோம்.

-தமிழ்நிருபர் ஆசிரியர்-

No comments:

Post a Comment